முகப்பு
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு, மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு, மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கே.எம்.பி.சண்முகசுந்நதரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ரா.காலசாமி. இவரது 9 வயது மகளை 8.10.2006-ம் தேதி இதே இடத்தைச் சேர்ந்தே நந்தவனநாடார் மகன் பாதமுத்து (படம்) (34) என்பவர் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாதமுத்துவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, பாதமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

பாதமுத்து, ஏற்கனவே 8.4.2008-ம் தேதி மம்சாபுரத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 22.7.15-ம் தேதி இதே நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →