141 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரியாறு அணை நீர்மட்டம்
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 19 நாட்களாக 141 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 19 நாட்களாக 141 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேக்கடியில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி 141.10 அடிக்கு உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த டிச.8-ம் தேதி அணை நீர்மட்டம் 141.70 அடியாக உயர்ந்தது. அணை நீர்மட்டம் 142 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து உபரிநீர் மதகுகள் வழியாக கேரளப் பகுதியில் திறக்கப்பட்டது.
பெரியாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால், அணை நீர்மட்டம் கடந்த 19 நாட்களாக 141 அடிக்கும் மேல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிச.8-ம் தேதி முதல் தற்போது வரை அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் தொடர்ந்து 141 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்
Advertisement
பெரியாறு அணை நிலவரம்: பெரியாறு அணை நீர்மட்டம் புதன்கிழமை 141.30 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 1,712 கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் தண்ணீர் இருப்பு 7,477 மில்லியன் கன அடி.