முகப்பு
தமிழ்நாடு

செலுத்திய மின் கட்டணத்தை அபராதத்துடன் மீண்டும் வசூலித்த அவலம்: ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

மின் நுகர்வோர், மின்கட்டணத்தை குறித்த காலத்தில் அஞ்சல் நிலையம் மூலம் செலுத்தியும், அவர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அவரிடம் அபராதத்துடன் மின்கட்டணம் வசூலித்த

தமிழ்நாடு

செலுத்திய மின் கட்டணத்தை அபராதத்துடன் மீண்டும் வசூலித்த அவலம்: ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

மின் நுகர்வோர், மின்கட்டணத்தை குறித்த காலத்தில் அஞ்சல் நிலையம் மூலம் செலுத்தியும், அவர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அவரிடம் அபராதத்துடன் மின்கட்டணம் வசூலித்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:

மின் நுகர்வோர், மின்கட்டணத்தை குறித்த காலத்தில் அஞ்சல் நிலையம் மூலம் செலுத்தியும், அவர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அவரிடம் அபராதத்துடன் மின்கட்டணம் வசூலித்த புகாரை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், அஞ்சல் துறை மற்றும் மின்துறை தனித்தனியாகவோ, கூட்டாகவோ பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிரம் சேர்த்து வழங்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்குரதவீதியைச் சேர்ந்தவர் மூத்த வழக்குரைஞர் வை.வைகுண்டம் (79). இவரது மின் நுகர்வோர் எண்ணிற்கு 2015 மே மற்றும் ஜூன் மாதத்திற்கு ரூ.1341 மின் கட்டணம் என்று மின் வாரிய ஊழியர் வீட்டிலிருந்த அட்டையில் 23.6.15-ம் தேதி  குறித்து வைத்து சென்றுள்ளார். இந்தத் தொகையை 26.6.15-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அஞ்சலகம் மூலம் வைகுண்டம் செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.

மின்வாரிய ஊழியர்கள் 21.7.15-ம் தேதி வைகுண்டம் வீட்டிற்கு வந்து, மின்கட்டணம் செலுத்தவில்லை. மின் இணைப்பை துண்டிக்கப்போகிறோம் என்று கூறியுள்ளார்கள். கட்டணம் செலுத்திய ரசீதை வைகுண்டம் காட்டியுள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் சென்றுவிட்டார்களாம்.

22.7.15-ம் தேதி ஊழியர்கள் மீண்டும் வந்து மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. உடனே தொகையைக் கட்டவில்லை என்றால் மின் இணைப்பைத் துண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து மின்வாரிய உதவிப் பொறியாளரை போய் பார்த்துள்ளார். அவரும் உங்களது பெயர் கட்டணம் செலுத்தாதவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அபராதத் தொகை ரூ.70 உடன் மின் கட்டணத்தைச் செலுத்தினால் தான் மின் இணைப்பு தொடரும் என்று கூறிவிட்டாராம். இதனையடுத்து அபராதத் தொகையுடன் கட்டணத்தை 23.7.15-ம் தேதி அபராதத் தொகையுடன் செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து வைகுண்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அஞ்சல்துறை மற்றும் மின்வாரியத்தின் சேவை குறைபாட்டால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு, பலத்த மன கஷ்டம் அடைந்துள்ளதாயும், தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்டும் மனு தாக்கல் செய்தார்.

மனு விசாரணை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணையின் இறுதியில் இவர்கள் அளித்த தீர்ப்புரை: கூடுதலாய் கட்டிய மின் கட்டணம் ரூ.1330 அடுத்த மின்கட்டணத்தில் சரி செய்யப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை சரி செய்யப்படவில்லை.

அஞ்சல் துறை மற்றும் மின்துறை தனித்தனியாகவோ, கூட்டாகவோ வழக்குரைஞர் வைகுண்டம் அடைந்த மன வேதனை கஷ்டத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மின்வாரியம் வசூலித்த அபராதத் தொகை ரூ.70-யை திரும்பத் தர வேண்டும். மேலும் இரு துறைகளும் இணைந்தோ, தனித்தனியாகவோ வழக்குச் செலவிற்கு ரூ.3 ஆயிரத்தை வைகுண்டத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →