தமிழ்நாடு

விருதுநகர் அருகே வீட்டிற்குள் புகுந்து நகை பணம் பறிப்பு: 5 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் அனுமதியி்ல்லாமல்  வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றது தொடர்பாக பெண் வீட்டார்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் அனுமதியி்ல்லாமல்  வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றது தொடர்பாக பெண் வீட்டார்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் சதீஸ்குமார். இவர் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகள் ரெங்கநாயகி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டில் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்தமாதம் பாண்டியராஜன் வீட்டிற்கு ரெங்கநாயகின் தந்தை ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், தாயார் ரேணுகாதேவி, வச்சக்காரப்பட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உறவினர் லட்சுமி ஆகியோர் வந்தார்களாம். இவர்கள் அத்துமீறி பாண்டியராஜனை கீழே தள்ளிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து உள்ளேயிருந்த 11 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை எடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றார்களாம்.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பாண்டியன் நகர் போலீஸாருக்கு வழக்கு பதிவு செய்ய புதன்கிழமை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராதாகிருஷ்ணன், ரெங்கநாயகி, ரேணுகாதேவி, சரவணக்குமார் மற்றும் லட்சுமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT