தமிழ்நாடு

விருதுநகர் அருகே விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி தொட்டியபட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த தொழில்

எஸ். பாண்டியன்

தென்னை மற்றும் மா விவசாயிகள் பயனடையும் வகையில் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி தொட்டியபட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த தொழில் நுட்ப பயிற்சி முகாமிற்கு வேளாண் இணை இயக்குநர் பூவலிங்கம தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சாகுபடி செய்வதற்கு முன்பாக விளைநிலங்களில் உழவியல் முறைகள் குறித்தும், பயிர் கழிவுகளை உரமாக மாற்றுவது, களைக்கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த இடு பொருள்களை பருவத்திற்கு கேற்ப வழங்குதல், குறுத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், தோட்டக்கலை பயிர்களை கவாத்து செய்வது போன்றவைகள் தொடர்பாக செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். அதைத் தொடர்ந்து மா மரக்கன்றுகளை அடர் நடவு முறையில் செய்து அதிகமான சாகுபடி செய்து லாபம் பெறுவதற்கான ஆலோசனைகளையும் எடுத்துரைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT