முகப்பு
தமிழ்நாடு

 சுகாதாரச் சீர்கேட்டில் மாம்பாக்கம்

மாம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்,தொழிற்சாலை கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகையால்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

மாம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்,தொழிற்சாலை கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகையால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாம்பாக்கம் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாம்பாக்கம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இந்தக் கழிவுநீர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர்
 கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் இந்தப் பகுதி மக்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவுப் பொருள்களை எரிப்பதால் வெளியேறும் புகை காரணமாக அதனை சுவாசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி தவிக்கின்றனர். எனவே கழிவுநீர்க் கால்வாய்களின் அடைப்பை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை
 மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் இந்தப் பகுதி மக்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →