விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கூட்டம்
விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.
விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நகர தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். இதில் மாவட்ட பொருளாளர் விக்னேஷ்குமார், அருப்புக்கோட்டை நகராட்சி உறுப்பினர் வி.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அறிமுகம் செய்து கொண்டு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
இதில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி சீரழிந்து வரும் சமுதாயத்தை அரசு காப்பாற்ற வேண்டும். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் விரைவில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம கமிட்டி, பூத் கமிட்டியை இம்மாதத்திற்குள் அமைக்க வேண்டும். அரசு அறிவித்த மருத்துவ கல்லூரியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.