முகப்பு
தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை:சேர்வலாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 83.66 அடியாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீ்ர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை: பாபநாசம் அணையில் 6 மி.மீ, சேர்வலாறு அணை 4 மி.மீ, மணிமுத்தாறு அணை 4.6 மி.மீ, கடனாநதி அணையில் 1 மி.மீ, ராமநதி அணையில் 2 மி.மீ, கருப்பாநதி அணையில் 4.5 மி.மீ, குண்டாறு அணையில் 6 மி.மீ, அடவிநயினார் அணையில் 19 மி.மீ.கன்னடியன் அணைக்கட்டில் 19 மி.மீ, அம்பாசமுத்திரம் 12 மி.மீ, சேரன்மகாதேவியில் 5.4 மி.மீ, தென்காசியில் 4.2 மி.மீ, செங்கோட்டையில் 2.1 மி.மீ, ஆய்க்குடியில் 1.2 மி.மீ, ஆலங்குளம் 1.4 மி.மீ, ராதாபுரம் 6 மி.மீ, நான்குனேரி 1 மி.மீ, சிவகிரியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வந்த வெப்பம் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. கடந்த 2 தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து  அதிகரித்து காணப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1301.16 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாசனம், குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 1204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 72 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 123.78 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

மணிமுத்தாறு அணையிலிருந்து 375 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 110 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், அடவிநயினார் அணையில் 25 கனஅடியும், கொடுமுடியாறு அணையில் 50 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.40 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 83.66 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.60 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 54.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 61.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 68.63 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 82.25 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →