தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒன்றாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒன்றாவது அலகில் (யூனிட்) பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒன்றாவது அலகில் (யூனிட்) பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்திதிறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நான்காவது அலகில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக ஒன்றாவது அலகில் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை இரவு முதல் உற்ப்ததி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 20 நாள்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தொரிவித்தனர்.
பராமரிப்பு பணிக்காக ஒன்றாவது அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தினமும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.