அரசு பேருந்தை வழி மறித்து தகராறு செய்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தை, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் முன்னாகச் சென்று வழி மறித்து வந்து, ஓட்டுநருடன் தகாறு செய்து அவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.
தமிழ்நாடுஅரசு பேருந்தை வழி மறித்து தகராறு செய்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தை, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் முன்னாகச் சென்று வழி மறித்து வந்து, ஓட்டுநருடன் தகாறு செய்து அவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தை, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் முன்னாகச் சென்று வழி மறித்து வந்து, ஓட்டுநருடன் தகாறு செய்து அவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆயர்தர்மத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை கான்சாபுரம், ஆர்.சி. தெருவைச் சேர்ந்த மு.சுந்தரமகாலிங்கம் (42) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
சீலநாயக்கன்பட்டி வழியே சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் மூவர் வந்துள்ளார்கள். இவர் தொடர்ந்து பேருந்தை முந்திச் சென்று, சாலையின் குறுக்கே இங்கும் அங்குமாக வண்டியை ஓட்டி, பேருந்து செல்லவிடாமல் தடுத்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடை அருகே வந்தபோது, ஓட்டுநர் சுந்தரமகாலிங்கம் பேருந்தை விட்டு இறங்கி மூவரிடமும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்துவர்களும் சேர்ந்து ஓட்டுநரை ஆபாசமாகப் பேசி தாக்கி அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்கள்.
இது குறித்து சுந்தரமகாலிங்கம், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் வாகனத்தை ஓட்டி வந்த துலுக்கபட்டியைச் சேர்ந்த முத்துராஜ், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆகிய மூவரும் தப்பி ஓடிவிட்டார். பின்னால் அமர்ந்து வந்த துலுக்கபட்டி க.மலைச்சாமி (52), கல்யாணிபுரம் இ.முனியாண்டி (60) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மூவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.