முகப்பு
தமிழ்நாடு

மூதாட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடத்திக் கூட்டிச் சென்ற ஆட்சித் தலைவர்

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், புகார் கொடுக்க வந்த மூதாட்டியை, தனது அலுவகத்திலிருந்து நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று திங்கள்கிழமை புகார் அளித்தது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:26 AM
பகிர்:

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், புகார் கொடுக்க வந்த மூதாட்டியை, தனது அலுவகத்திலிருந்து நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று திங்கள்கிழமை புகார் அளித்தது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறைவடைந்து, ஆட்சித் தலைவர் கீழே இறங்கி வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர், லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த காளி என்பவரின் மனைவி ஜக்கம்மாள் என்ற மூதாட்டி தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் விவரம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது: எங்களது ஊரில் 1.75 ஏக்கர் நிலம் எங்களுக்கு உண்டு. இதனை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் விற்க திட்டமிட்டு ரூ.10 லட்சம் கிரையம் பேசி, ரூ.1 லட்சம் முன்பணம் பெற்றோம். பின்னர் பத்திரப் பதிவிற்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு பத்திரங்களில் கையொப்பம் கேட்டார். மீதி பணம் ரூ.9 லட்சத்தை விரைவில் தருவதாயும், ஆனால் பத்திரம் முடித்துத் தரவும் கூறினார். ஆனால் எனது கணவர் காளி கையொப்பமிட மறுத்துவிட்டு வந்துவிட்டார். சில நாட்களில் உடல் சுகவீனம் காரணமாக காளி இறந்துவிட்டார். இந்நிலையில் ரூ.1 லட்சத்தை முன்பணம் வாங்கிய நபரிடம் கொடுத்துவிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன். ஆனால் அந்த நபர் மேலும் ரூ.35 ஆயிரம் செலவு செய்துவிட்டதாயும், அதனைக் கேட்டும் பல வகைகளில் தொல்லை கொடுத்து வருவதாய் கூறினார்.

இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடத்தியே அழைத்துச் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் விவரத்தைக் கூறினார். அவர் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, இது விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆட்சித் தலைவர் மூதாட்டியை நடத்தி அழைத்துச் சென்றதை, யாரோ செல்வதாக அப் பகுதியில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். பின்னர் அது ஆட்சித் தலைவர் என்று அறிந்ததும், அவரது செயலை வெகுவாக பாராட்டினர். இது ஆட்சித் தலைவர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தயது.

முழு கட்டுரையைப் படிக்க →