விருதுநகர் மாவட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடுவிருதுநகர் மாவட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கண்ணன் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ரேசன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் தட்டுப்பாடின்றி அரசு வழங்கக்கோரியும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் காத்தமுத்து தலைமையிலும், காரியாபட்டியில் மதிமுக மாவட்டச் செயலர் சண்முசுந்தரம் தலைமையிலும், ராஜபாளையத்தில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையிலும், சாத்தூரில் மதிமுக நகரச் செயலர் தங்கவேல் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் தி.ராமசாமி தலைமையிலும், சிவகாசியில் மதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.