முகப்பு
தமிழ்நாடு

மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 265 பேருக்கு தீபாவளி புத்தாடை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் 265 பேருக்கு புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் 265 பேருக்கு புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது.

பாப்பையநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி தலைமை தாங்கினார். மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இசபெல்லா வரவேற்றார்.

மாணவ மாணவியருக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் புத்தாடைகளை வழங்கி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மகளிர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு மக்கள் கல்வி நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பயிற்சி அளித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஏராளமான பெண்கள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கி வருவதாய் கூறினார். மேலும் மாணவர்கள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் சிறந்த குடிமக்களாக திகழ ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியோரை மதித்தல் உள்ளிட்ட நற்பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →