தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிவன், பார்வதி சிலைகள் அமெரிக்காவில் மீட்பு

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள ஒர் அருங்காட்சியம் தன் வசம் இருந்த 1000 ஆண்டு பழமையான, தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட வெண்கலத்திலான சிவன் மற்றும் பார்வதி சிலைகளை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

PTI

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள ஒர்அருங்காட்சியம் தன் வசம் இருந்த 1000 ஆண்டு பழமையான, தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட வெண்கலத்திலான சிவன் மற்றும் பார்வதி சிலைகளை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள பழங்கால கோயில்களிலிருந்து, பல கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி, விற்பனை செய்தது தொடர்பாக பிரபல சிலை மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'ஆர்ட் ஆப் பாஸ்ட்'  என்ற பழங்காலப் பொருள்கள், சிலைகள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.

அவரிடமிருந்து வாங்கப்பட்ட ஏராளமான திருட்டு சிலைகளை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையும்,  உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இன்டியானா மாகாணத்தில் உள்ள டேவிட் ஆவ்ஸ்லி அருங்காட்சியத்தில் இருந்த இரு சிலைகளை, அதன் நி்ர்வாகத்தினர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவை, சோழர் காலத்தைச் சேர்ந்த (860-1279 கிமு) வெண்கலத்திலான சிவன் மற்றும் பார்வதி சிலைகளைகளாகும்.

இந்தியாவின் தமிழகத்திலிருந்து கடத்தல் மன்னன் கபூரால்  கடத்தப்பட்ட இந்த சிலைகள் கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளவர்கள் இத்தகைய சாமி சிலைகளுக்கு வெகு மதிப்பளித்து, மிக அதிக விலைக்கு வாங்கி செல்வதால், இச்சிலைகளுக்கு அங்கு அதிக மதிப்புள்ளது.

கபூர் கைது செய்யப்பட்ட பின்பு, கடந்த 8 மாதங்களில் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகளிலிருந்து பல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கபூர் தற்போது சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT