தமிழ்நாடு

நிதீஷ் பதவியேற்பு விழா: மோடிக்கு அழைப்பு

பிகார் முதல்வராக பதவியேற்கவிருக்கும் நிதீஷ்குமார், இன்று காலை பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து, பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

PTI

பிகார் முதல்வராக பதவியேற்கவிருக்கும் நிதீஷ்குமார், இன்று காலை பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து, பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பிகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் வருகிற 20 ஆம் தேதி, பாட்னா நகரின் காந்தி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்கிறார்.

பிகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் 'சத்' திருவிழா இன்று நிறைவடைந்ததையடுத்து, பிரமதர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிதீஷ்குமார், பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

எனினும், இவ்விழாவில் பிரதமர் பங்கேற்க வாய்ப்பில்லை என பாரதீய ஜனதா கட்சியின் பிகார் மாநில துணைத் தலைவர் சஞ்சய் மாயூக் கூறினார். ஏற்கெனவே ஒப்பு கொண்ட நிகழ்ச்சிகளில் பிரமதர் பங்கேற்கவிருப்பதால், நிதீஷ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றார்.

பிரதமர் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் பதவியேற்பு விழாவுக்கு நிதீஷ் அழைத்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களான மமதா பானர்ஜி, அரவிந்த கேஜரிவால், தருண் கோகாய், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

தமிழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்ளவிருப்பதாக, அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT