தமிழ்நாடு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதிய நூலகம்: தினமணி ஆசிரியர் திறந்து வைத்தார்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை

தினமணி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
 "டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் நினைவு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நூலகம், சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் பத்திரிகையாளர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.
 நூலகத்தைத் திறந்து வைத்த "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன், நூலகத்தைப் பார்வையிட்டு சிறப்பாகச் செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.
 மேலும், நூலகத்துக்கு அன்பளிப்பாக புத்தகங்களை அவர் வழங்கினார். நூலகம் அமைக்க உதவி புரிந்த பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு காந்தியடிகளின் சத்திய சோதனை புத்தகத்தை அவர் பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் (பொறுப்பு) கு. கீதப்பிரியன், இணைச் செயலாளர் பாரதி தமிழன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்! உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் பலி: அவதூறு பரப்பி கைதானவர்கள் பேசும் விடியோ! | TVK | Vijay

எனக்கு மரியாதை வேண்டாமா? சிம்பு குறித்து விஜய் சேதுபதி!

விலக மறுக்கும் திரைகள்

SCROLL FOR NEXT