முகப்பு
தமிழ்நாடு

வக்போர்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை

வக்போர்டு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியான பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

Updated On : 4 அக்டோபர், 2015 at 10:43 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:23 PM

வக்போர்டு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியான பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
    இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கணினிபிரிவில் பயிற்சி பெற்று பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். மேலும், இப்பணியிடத்திற்கு பிற்பட்ட முஸ்லீம் மட்டும் பரிந்துரைக்கப்படவுள்ளனர். அதேபோல், 1.7.2015 அன்றைய தேதியில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு மட்டும் 10 வருட வயது வரையில் சலுகை உண்டு. இதற்கான உத்தேச பதிவு மூப்பு முன்னுரிமையற்றவர்கள்-25.6.2007 வரையும், மாற்றுத்திறனாளிகள்-5.2.2001 வரையிலும் இருக்க வேண்டும்.
   எனவே மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உத்தேச பதிவு மூப்புடைய பிற்பட்ட வகுப்பு(முஸ்லீம்) பிரிவைச் சேர்ந்தவர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதிசான்றிதழ் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவைகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைநாள்களில் வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரத்தை அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.