முகப்பு
தமிழ்நாடு

4 கட்சி கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: வைகோ அறிவிப்பு

நான்கு கட்சி கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அரசியல் கூட்டணி குறித்து முறைப்படி அறிவிப்பை வெளியிடுவோம் என்று வைகோ தெரிவித்தார்.

Updated On : 4 அக்டோபர் 2015, 9:40 pm IST
பகிர்:

நான்கு கட்சி கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அரசியல் கூட்டணி குறித்து முறைப்படி அறிவிப்பை வெளியிடுவோம் என்று வைகோ தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடக்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அவர் பேசினார்.

2-வது நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளி்டட பகுதிகளில் பேசினார். மாமல்லபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

4 கட்சிகள் கொண்ட கூட்டியக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. திட்டமிட்டபடி திங்கள்கிழமை திருவாரூரில் அரசியல் கட்சி கூட்டணியாக அறிவிக்கப்படும்.

இந்த கூட்டணி 2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக மட்டும் அமைந்த கூட்டணி அல்ல. மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்க்க ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.