சுற்றுலா வாரவிழா: விருதுநகர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு போட்டி
விருதுநகர் மாவட்ட அளவில் சுற்றுலா துறை வாரவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வருகிற 9 ஆம் தேதி கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சுற்றுலா வாரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், குறிப்பிட்ட நாளில் பள்ளிக் கல்வித்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து நூறு கோடி சுற்றுலா பார்வையாளர்கள்-நூறு கோடி வாய்ப்புகள் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி 6-ம் வகுப்பு முதல் 12 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பிடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறையும் இணைந்து பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement