விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையிலிருந்த 7 சவரன் நகை திருட்டு
விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையில் வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகரில் ஓடும் பேருந்தில் கைப்பையில் வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கண்ணனின் மனைவி முருகேஸ்வரி(26). இவர் இன்று காலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் ஏறிச் சென்றாராம். அப்போது, மருத்துவமனையின் முன்பு இறங்கி தான் கொண்டு வந்த கைப்பையை பார்க்கும் போது உள்ளே வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவற்றை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்தில் கைப்பையில் இருந்த நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Advertisement