விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி
விருதுநகர் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
விருதுநகர் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமகள் வரவேற்புரை வழங்கினார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினிகளை மொத்தம் 181 பேருக்கு வழங்கினார்.
இதில், நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் டி.பி.வெங்கடேஷ், அதிமுக நகரச் செயலாளர் நயினார் முகமது, நகராட்சி உறுப்பினர்கள் தனலட்சுமி, சுரேஷ்குமார், அன்னலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
அதைத் தொடர்ந்து சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 77 பேருக்கும், சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 147 பேருக்கும், மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 42 பேருக்கும், ஹாஜிபி செய்யது மேல்நிலைப்பள்ளியில் 196 பேருக்கும் அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.