ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி ரெங்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி இந்துராணி. இவர்களின் 14 வயது மகள் இங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் பின்புறம் மகேந்திரன் மகன் பால்ராஜ் (19) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சிறுமி பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில், பால்ராஜ் பின்னாலேயே வந்து, உன்னை காதலிக்கிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் 11.9.15-ம் தேதி சிறுமியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, உன்னுடைய அம்மாவிடம் கூறி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும், ஏற்றுக் கொள்ள மறுத்தால் ஓடிப்போய்விடுவோம் என்று கூறி, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பிறகு சிறுமியை பால்ராஜ் பார்க்க வராமல், பேசாமல் இருந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டார் என்று நினைத்து தாய் இந்துராணியிடம் இது குறித்து சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பால்ராஜைக் கைது செய்தனர்.