முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி சேவையில் குறைபாடு: வாடிக்கையாளருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீட்டுடன் டெபாசிட் தொகையை வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேவையில் ஏற்பட்ட குறைபாட்டை அடுத்து, வாடிக்கையாளருக்கு டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரத்துடன் ஒரு மாத்திற்கு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேவையில் ஏற்பட்ட குறைபாட்டை அடுத்து, வாடிக்கையாளருக்கு டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரத்துடன் ஒரு மாத்திற்கு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை, திருச்சுழி சாலையில் குடியிருந்து வருபவர் கே.கிருஷ்ணவேணி. இவரது கணவர் கேசவன் இறந்துவிட்டார்.

கிருஷ்ணவேணியின் மைத்துனர் வல்லபன் என்பவர் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புளியம்பட்டி கிளையில் 4.7.2006-ம் தேதி ரூ62,222 மற்றும் 51,107-ம், 19.6.2006-ம் தேதி ரூ.45,759 மற்றும் ரூ.45,759-ம், 4.7.2006-ல் ரூ.52,184-ம் டெபாசிட் செய்துள்ளார்.

மேலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருப்புக்கோட்டை கிளையில் 4.7.2006-ம் தேதி 52,184-ம், 3.8.2005-ம் தேதி ரூ.35 ஆயிரம் மற்றும் ரூ.35 ஆயிரம் டெபாசிட் செய்துள்ளார்.

இந்நிலையில் வல்லபன் 28.11.2006-ம் தேதி இறந்துவிட்டார்.

இவரது பெயரில் உள்ள டெபாசிட் தொகையை திரும்பப் பெற கிருஷ்ணவேணி சட்டப்படியான வாரிசு என்று கோரி வாரிசுரிமை மனு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் இரு வங்கிக் கிளை மேலாளர்களையும் எதிர்தரப்பினராக சேர்த்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிருஷ்ணவேணிக்கு 6.8.2010-ம் தேதி வாரிசுரிமை சான்று வழங்கியது. இதன்படி டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற வங்கிக்குச் சென்றபோது, வங்கியின் கிளை மேலாளர்கள் பணத்தைத் தர மறுத்து வீண் அலைக்கழிப்பு செய்துள்ளார்கள். இதில் வங்கிச் சேவையில் குறைபாடு உள்ளது என்றும், இச் செயலால் பலத்த மன உளைச்சல் அடைந்த தனக்கு டெபாசிட் தொகையை வங்கிகள் இழப்பீட்டுத் தொகையுடன் திரும்பத் தர வேண்டும் என்றும் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கிருஷ்ணவேணி மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர்.

இவர் அளித்த தீர்பின் விவரம்: விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கிக் கிளைகள், வைப்பீட்டு ரசீதுகளில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பெரிதுபடுத்தி, அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றம் வழங்கிய வாரிசு சான்றிதழைப் புறக்கணித்து டெபாசிட் தொகையை வழங்கமால் இருந்துள்ளார்கள். வங்கி விதிகளின்படியான சட்டப்படியான வட்டியுடன் டெபாசிட் தொகையை பெற கிருஷ்ணவேணி உரிமையுடையவர் என்று முடிவு செய்யப்படுகிறது.

வைப்பீட்டுத் தொகையைத் தராமல் காலம் கடத்தி வந்த செயல் வங்கியின் சேவையில் குறைபாடுள்ளதைக் காட்டுகிறது.

டெபாசிட் தொகையை வங்கியின் சட்டப்படியான வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். கிருஷ்ணவேணிக்கு ஏற்பட்ட மனகஷ்டம், மன உளைச்சலுக்கு, இரு வங்கியின் மேலாளர்கள் தனியாகவோ, கூட்டாகவோ ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →