முகப்பு
தமிழ்நாடு

மாநில நிகர்நிலை பல்கலை.களுக்கிடையிலான கூடைப்பந்துப் போட்டி: எஸ்.ஆர்.எம்., இந்துஸ்தான் அணிகள் முதலிடம்

தமிழ்நாடு மாநில நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையே விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

தமிழ்நாடு மாநில நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையே விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நாட்கள் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றன.

போட்டியை பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த் முன்னிலையில், துணை வேந்தர் ச.சரவணசங்கர் தொடங்கி வைத்தார்.

போட்டியில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டன.

இதில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்று ரூ.36 ஆயிரம் பரிசையும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பெற்று ரூ.24 ஆயிரம் பரிசையும், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடம் பெற்று ரூ.12 ஆயிரம் பரிசையும் வென்றன.

பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்று ரூ.36 ஆயிரம் பரிசையும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பெற்று ரூ.24 ஆயிரம் பரிசையும், கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியினர் மூன்றாம் இடம் பெற்று ரூ.12 ஆயிரம் பரிசையும் பெற்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வேந்தர் க.ஸ்ரீதரன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வெண்குமார், எம்.ஜெயக்குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.டி.செல்வகணேஷ், எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →