முகப்பு
தமிழ்நாடு

குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீசாருக்கு சிறப்பு வெகுமதி

விருதுநகர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் 15 பேருக்கு நேற்று சிறப்பு வெகுமதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வழங்கினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் 15 பேருக்கு நேற்று சிறப்பு வெகுமதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் குற்ற வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அப்போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த வழக்கு விவரங்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள், முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் விளக்கம் கேட்டார்.

அப்போது, கடந்த 5ம் தேதி ஆதரவற்ற சிறுமியை மீட்டு ஒப்படைத்த விருதுநகர் பஜார் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன், குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கமலாவதி (சிவகாசி), யசோதா (விருதுநகர்) ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் சிறப்பு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அதேபோன்று, சிவகாசி நகர் மற்றும் கிழக்கு காவல் நிலயங்களில் திருட்டு வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு சொத்துக்களை மீட்ட இன்ஸ்பெக்டர் சீனிவாசன், எஸ்.ஐ. ராமராஜ், எஸ்.எஸ்.ஐ. போத்தி, காவலர்கள் ராஜ்குமார், ஜெயபிரகாஷ், பாண்டி, வெள்ளைத்துரை, ஆமத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ. சுரேஷ்குமார், நத்தம்பட்டி எஸ்.ஐ. பாஸ்கரன், காவலர்கள் தங்கேஸ்வரன், மாணிக்கசெல்வி, சேத்தூர் எஸ்.ஐ.அய்யனார்சாமி ஆகியோருக்கும் சிறப்பு வெகுமதிகள் வழங்கி அவர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →