முகப்பு
தமிழ்நாடு

வத்திராயிருப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கத்தியைக் காட்டி வழி்ப்பறியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு

வத்திராயிருப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கத்தியைக் காட்டி வழி்ப்பறியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கத்தியைக் காட்டி வழி்ப்பறியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, பிள்ளர் மட்டம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மா.மணி (68). இவர் கடந்த 4 ஆண்டுகளாய் வத்திராயிருப்பில் குடியிருந்து, விவசாய வேலை செய்து வருகிறார். தோட்டத்திற்கு செல்வதற்காக வத்திராயிருப்பு நாடார் பஜாரில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மேலத்தெருவைச் சேர்ந்த வே.ராதாகிருஷ்ணன் (35) என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்து ஊருக்குச் செல்ல பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவேன் என்ற மிரட்டியுள்ளார். மேலும் அரிவாளகைக் காட்டி மணியின் பையில் இருந்த ரூ.1200 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மணி புகார் செய்தார். போலீஸார் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெண்ணிற்கு கொலை மிரட்டல்:

வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மனைவி சங்கிலியம்மாள் (26). இவரது தந்தை மாடசாமியை இரு ஆண்டுகளுக்கு முன்னர் வே.ராதாகிருஷ்ணன் என்பவர் அரிவாளால் வெட்டியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சங்கிலியம்மாளிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த வே.ராதாகிருஷ்ணன் (35) மற்றும் இவரது சகோதரர் ரமேஷ் ஆகியோர் ஆபாசமாகப் பேசி, வழக்கை திரும்பப் பெறாவிட்டால், குடும்பத்தோடு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்களாம். இது குறித்து சங்கிலியம்மாள், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனைக் கைது செய்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →