முகப்பு
தமிழ்நாடு

சாதிப்பெயர் கூறி  பெண்ணைத் தாக்கிய ஊராட்சித் தலைவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை

புதுக்கோட்டை அருகே இளம் பெண்ணை சாதிப்பெயரைக்கூறி திட்டியதுடன் அவரை செருப்பால்

Updated On : 26 அக்டோபர், 2015 at 3:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:33 PM

புதுக்கோட்டை அருகே இளம் பெண்ணை சாதிப்பெயரைக்கூறி திட்டியதுடன் அவரை செருப்பால் அடித்து அவமானப்படுத்திய ஊராட்சித்தலைவருக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து புதுகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

வடகாடு அருகேயுள்ள கருக்காக்குறிச்சி தெற்கு தெரு ஊராட்சியைச் சேர்ந்தவர் சப்பாணி என்பவரது மகள் சோனியாகாந்தி(23). இவர் சென்னையில் எம்பிஏ படித்துவந்தார்.    குடல் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ததால் ஓய்வுக்காக ஊருக்கு வந்துள்ளார். இவர் கடந்த 28.4.2013 -ல் தனது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்தபோது, அவ்வழியாகச் சென்ற அவ்வூராட்சி மன்றத்தின் தலைவர் ந. பழனிவேல்(45)  கட்டிலில் படுத்திருந்த  சோனியாகாந்தி எழுந்து நின்று தனக்கு மரியாதை செலுத்த வில்லை என்பதால், அவரை சாதிப் பெயரை சொல்லித் திட்டியதுடன் செருப்பால் அடித்தாராம்.  இதனால் காயம் அடைந்த சோனியா காந்தி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆலங்குடி காவல்துணை கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் விசாரித்தார். இவ்வழக்கை விசாரித்த புதுகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பி. ரவி, சாதிப்பெயரைச் சொல்லித்திட்டிய குற்றத்துக்காக ஊராட்சித்தலைவர் ந. பழனிவேலுக்கு 1 ஆண்டு கடுங்காவல்சிறைதண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், செருப்பால் அடித்த குற்றத்துக்கு 3 மாத சிறையும், ரூ. 1000 -ம் அபராதமும்,  காயம் விளைவித்த குற்றத்துக்காக ரூ. 1000 -ம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.