முகப்பு
தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Updated On : 29 அக்டோபர், 2015 at 8:03 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:35 PM

புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை நிரந்தரமாகத்தடை செய்ய வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியப்பட நாளாகும் என்பதே உண்மை. இந்நிலையில், மக்கக்கூடிய மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களை 40 மைக்ரான் கன அளவுக்குக்  குறையாமல் தயாரித்து விற்பனை செய்யலாம் எனவும், அதற்கு கீழான கன அளவு கொண்ட பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவித்தது. இதை மீறும் வணிகர்கள் மீது அபராதம் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் விதி மீறல்கள் நின்றபாடில்லை. இது குறித்த வரப்பெற்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்,  நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பா. காளிமுத்து ஆகியோர் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நகராட்சி ஆணையர்(பொ) ஜெ. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், புதுகையில்  மேல ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளில் உள்பட  சுமார் 35 -க்கும் மேற்பட்ட கடைகளில் நகர் நல அலுவலர் பா. கலைவாணி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 3 டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்ததற்காக தலா ரூ. 1000 -ம் அபராதமும், மேலும் 12 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்தனர்.மேலும், விதி மீறல்களுக்காக ரூ, 5,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் 5 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யது, ரூ. 1 லட்சம்  அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஆணையர்(பொ). ஜெ. சுப்பிரமணியன். இதில்.  துப்புரவு ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், இஸ்மாயில், பரக்கத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.