தமிழ்நாடு

கணவரை எரித்துக்கொன்றதாக அரசுப் பள்ளி ஆசிரியை கைது

மதுரை அருகே கணவரை எரித்துக்கொன்றதாக அரசு பள்ளி ஆசிரியை போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஜெயப்பாண்டி

மதுரை அருகே கணவரை எரித்துக்கொன்றதாக அரசு பள்ளி ஆசிரியை போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (49). இவரது மனைவி லட்சுமிகயல்விழி (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

லட்சுமிகயல்விழி மதுரை அருகேயுள்ள வடக்கம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியை. கணவர், மனைவிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர்.

மதுரை டோக் நகர் பகுதியில் லட்சுமிகயல்விழி இருமகள்களுடன் வசித்து வருகிறார். ரவிசந்திரன் தனியாக மேலக்குயில்குடியிலுள்ள சொந்தவீட்டில் வசித்தார். இந்நிலையில் எரிந்த நிலையில் அவர் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக லட்சுமிகயல்விழியை நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

லட்சுமிகயல்விழி மீது ரவிசந்திரன் சந்தேகப்பட்டதாலே இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பின் வீடு விற்பது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுப் பத்திரத்தைக் கேட்டு லட்சுமிகயல்விழி மேலக்குயில்குடி சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், லட்சுமிகயல்விழி கேனில் இருந்த பெட்ரோலை கணவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். எரிந்து விழுந்த கணவர் மீது படுக்கை உள்ளிட்டவற்றை போட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

ரவிச்சந்திரன் எரிந்து சடலமான நிலையில் மறுநாள் காலையிலே வெளியே தெரியவந்துள்ளது. தன்னை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாலே கணவரை எரித்துக்கொன்றதாக ஆசிரியை லட்சுமிகயல்விழி கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை லட்சுமிகயல்விழி மதுரை மாவட்ட 6 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT