மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் காயமுற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடுமோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் காயமுற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் காயமுற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகாசி, புதுத்தெருவைச் சேர்ந்தவர் கந்தையா மகன் மாரியப்பன் (37). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளிலில் சென்றுள்ளார். அப்போது சிவகாசி சாலையில் கொள்ளூர்பட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முதலியார்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (48) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இருவரும் காயம் அடைந்தனர். சுய நினைவு இழந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மாரியப்பன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.