முகப்பு
தமிழ்நாடு

ராஜபாளையத்தில் தம்பதியினரை அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தம்பதியினரை அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நேற்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தம்பதியினரை அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நேற்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டது.

ராஜபாளையம், துரைச்சாமியாபுரம், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (45). இவரது மனைவி அழகம்மாள். இவர்கள் இருவரும் கிராமத்தில் 10.5.2008-ம் தேதி நடைபெற்ற பொங்கல் விழாவின் வேடிக்கையை வீட்டின் முன்பு கட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே இடத்தைச் சேர்ந்த வீ.தவக்களை (எ) பெரியசாமி (35) என்பவர் கருப்பையாவை ஆபாசமாகப் பேசியுள்ளார். ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டதற்கு, அரிவாளால் கருப்பையாவை வெட்டியுள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற அழகம்மாளையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீ.தவக்களை (எ) பெரியசாமியைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மகிழா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, இருவரை வெட்டிய குற்றத்திற்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →