முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சின்ன அத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்-முத்துலட்சுமி (41) தம்பதியினரின் மகன் முத்துக்குமார் (19). 10-ம் வகுப்பு முடித்துள்ள இவர், சாட்சியாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தினக் கூலியாக வேலை செய்து வந்தார். வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். தந்தை, வாகனம் ஓட்ட உரிமம் இல்லை. உரிமம் எடுத்த பிறகு ஓட்டலாம் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த முத்துக்குமார் வியாழக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, சின்ன அத்திகுளம் கண்மாய் கரையில் விழுந்து கிடந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →