முகப்பு
தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலை. வேந்தருக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது: ஆளுநர் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரனுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசையா வழங்கி கௌரவித்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:39 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரனுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசையா வழங்கி கௌரவித்தார்.

சென்னையில் உள்ள ரெயின்டிராப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் கல்வி சேவையில் சிறந்து செயலாற்றும் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த கல்வி சேவை விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

நிறுவனத்தின் நிறுவனம் மற்றும் தலைவர் அரவிந்த் ஜெயபால் வரவேற்றார்.

கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரனுக்கு விருதை வழங்கி தமிழக ஆளுநர் கே.ரோசையா பேசுகையில் கூறியதாவது: 

பல துறைகளில் கல்வி நிறுவனங்களை நிறுவி, வாய்பேச இயலாத மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு கல்வி, பெண் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கி சேவை புரிந்து வருகிறார். விழாவில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி, டாக்டர் சுல்தான் அகமத் இஸ்மாயில், சீக் சலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக் கலந்து கொண்டு கல்வி சேவை விருது பெற்ற ஸ்ரீதரனை வாழ்த்தி உரையாற்றினர்.

ரெயின்டிராப்ஸ் சமூகப்பணி இயக்கம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுற்றுப்புற கிராமப்புற மக்களுக்கு தொண்டாற்றும் என்று நிறுவனத்தின் நிறுவனர் விழாவில் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →