முகப்பு
தமிழ்நாடு

மாநில கிரிக்கெட் போட்டி: சிவகாசி அணி வெற்றி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிவகாசி டாஸ்மேனியன் கிரிக்கெட் அணி முதலிடம் பெற்று ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:39 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிவகாசி டாஸ்மேனியன் கிரிக்கெட் அணி முதலிடம் பெற்று ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது.

போட்டிகள் ஆகஸ்டு 9-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, செப்டம்பர் 6-ம் தேதி நிறைவு பெற்றது. நாக் அவுட், லீக், செமி பைனல் மற்றும் பைனல் என்ற முறையில் நடைபெற்ற இப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.

பரிசளிப்பு விழா செவ்வாய்கிழமை சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. அரிமா மண்டலத் தலைவர் புளியங்குடி என்.கந்தசாமி, சி.எம்.எஸ். பள்ளியில் தலைமை ஆசிரியர் சாம் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் போட்டியில் முதலிடம் பெற்ற சிவகாசி டாஸ்மேனியன் கிரிக்கெட் அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் கிரிக்கெட் அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற மதுரை ஏசியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் பொறியாளர் எம்.பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியர் சு.சுகுமாறன், கார்த்திகேயன், சையது உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சொக்குமுத்து போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். உறுப்பினர் டி.வி.கே.கந்தசாமி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →