முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டம் செயல்படுத்துவதில் உள்ள குறைகளை களையும் வகையில் பொதுமக்களுக்கான  குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

Updated On : 10 செப்டம்பர், 2015 at 8:29 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:10 PM

விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டம் செயல்படுத்துவதில் உள்ள குறைகளை களையும் வகையில் பொதுமக்களுக்கான  குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு:

இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை வட்டார அளவில் கூட்டம் நடத்தி தீர்வு காண உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு வட்டத்திலும் அந்தந்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரின் தலைமையில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Advertisement

இக்கூட்டம் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும், தேர்வு செய்த கிராமங்களில் நடத்தப்பட இருக்கிறது. இதில், ராஜபாளையம்-சுந்தரராஜபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர்-படிக்காசுவைத்தான்பட்டி, சிவகாசி- அப்பையநாயக்கன்பட்டி, சாத்தூர்-கே.மேட்டுப்பட்டி, விருதுநகர்-எல்லிங்கநாயக்கன்பட்டி, அருப்புக்கோட்டை-பூலாங்கால்  காரியாபட்டி-வளையங்குளம், திருச்சுழி-விடத்தக்குளம் ஆகிய கிராமங்களில்  மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 1 மணி வரையில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று பொதுவிநியோகம் திட்டம் செயல்படுத்துவதில் காணப்படும் குறைகளை நேரிலோ அல்லது மனு மூலமாகவோ அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது. மேலும், இம்முகாமில் குடும்ப அட்டையி்ல் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.