பள்ளி மாணவர்களுக்குள் மோதல்: ஒருவர் காயம்: 5 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம் அடைந்தார். ஒரு தரப்பு மாணவர் தான் சார்ந்துள்ள சமுதாயத்தைச் சேர்ந்த வெளியாட்களை அழைத்து வந்து குறிப்பிட்ட மாணவரைத் தாக்கிய வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடுபள்ளி மாணவர்களுக்குள் மோதல்: ஒருவர் காயம்: 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், என்.ஜி.ஓ.ஓ. காலனியில் தியாகராசா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் அச்சங்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துசரவணன் மகன் நந்தக்குமார் (16) 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்துள்ளார். அப்போது இதே பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றொரு பிரிவில் படிக்கும் செங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் கதிரவன் (16) என்பவரும் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கதிரவன் ஊரில் போய் சொல்லியுள்ளார். அப்போது இவர் சார்ந்துள்ள சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் துரைப்பாண்டி, குமார் மகன் பகவதிராஜ், செல்வம் மகன் பால்பாண்டி, தங்கவேல் மகன் வேல்முருகன், செல்வம் மகன் முனியாண்டி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த நந்தக்குமாரை ஆபாசமாகப் பேசி அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது குறித்து நந்தக்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரைப்பாண்டி, பகவதிராஜ், பால்பாண்டி, வேல்முருகன், முனியாண்டி ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிபதி பசும்பொன் சண்முகையா 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.