முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் மாநகராட்சி மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியினர் திடீரென மேயரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியினர் திடீரென மேயரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் இ. புவனேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயண்நாயர், உதவி ஆணையர்கள் து. கருப்பசாமி, சாந்தி, வசந்தராஜன், சாமுவேல்செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

குறை தீர்க்கும் கூட்டத்தை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், வாரம் ஒரு நாள் ஒரு வார்டினை தேர்வு செய்து மக்களைத் தேடி மாநகராட்சி திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரி்க்கை மனுக்களை அதிகாரிகளிடம் பெறுமாறு தெரிவித்த மேயர், மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.  அப்போது அங்கு மனு அளிக்க காத்திருந்த மாநகராட்சி 45 ஆவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மண்டலத் தலைவர் ஜி.ஐயப்பன், மாமன்ற உறுப்பினர் பொன். அழகுராஜ் உள்ளிட்டோர் மேயரை முற்றுகையிட்டனர்.

45 ஆவது வார்டில் ஆஞ்சநேயர் தெருவில் இருந்து திரிபுரசுந்தரி அம்மன் கோயிலுக்கு செல்லும் தெருவை இணைக்கும் பகுதியில் 30 அடி நீளம், 8 அடி அகலத்தில் உள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாத நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி மாணவர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

எனவே இப்பாலத்தினை அகலப்படுத்தி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி அளித்தார். குறை தீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து ஆணையர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →