முகப்பு
தமிழ்நாடு

கூடன்குளம் அணுஉலையில் அக்டோபரில் மின் உற்பத்தி: ஆர்.எஸ். சுந்தர் தகவல்

கூடன்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

கூடன்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வரும் அக்டோபர் மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் புதன்கிழமை தெரிவித்தார்.

திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க
வருகை தந்த கூடன்குளம் அணுஉலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் அளித்தப் பேட்டி: கூடன்குளம் அணுஉலையில் முதலாவது அலகில் பராமரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்வதற்காக மின்சாரம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. மின் உற்பத்தி நிறுத்தம் செய்து 90 தினங்கள் முடிவடைந்தது. எனினும் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாத காரணத்தால், மின்சாரம் உற்பத்தியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இறுதியில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கும்.

கூடன்குளம் அணுஉலை 2 ஆவது அலகில் மாதிரி எரிபொருள் நிரப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் 2 மாதங்களில் அணுஉலையில் யூரேனியம் எரிபொருள் நிரப்பி ஆய்வு செய்யும் பணி தொடங்கும்.

கூடன்குளம் அணுஉலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அணுஉலை அமைந்துள்ள கூடன்குளம், ராதாபுரம், உவரி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ மேம்பாட்டு பணிக்காக ரூ. 12 கோடி வழங்கப்பட்டு அப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →