முகப்பு
தமிழ்நாடு

சாத்தூர் அருகே இடிமின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலையில் இடிமின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு அறை சேதமடைந்தது.

Updated On : 24 செப்டம்பர், 2015 at 9:44 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:18 PM

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலையில் இடிமின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு அறை சேதமடைந்தது.

சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே கோமாளிபட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறையில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், இன்று வழக்கமாக பணியில் ஈடுபட்டு மாலையில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மழை பெய்த போது இடிமின்னல் தாக்கியதில் மத்தாப்பூ தயார் செய்யும் அறையின் மீது விழுந்தது. அதில், ஏற்பட்ட தீ விபத்தில் தயார் செய்து வைத்திருந்த கம்பி மத்தாப்பூ பெட்டிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதோடு, அறையும் சேதமடைந்தது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.