திருச்சுழி அருகே விஷம் குடித்து ஒருவர் சாவு
திருச்சுழி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கவலையடைந்த ஒருவர் விஷம் குடித்து உயிழந்தார்.
திருச்சுழி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கவலையடைந்த ஒருவர் விஷம் குடித்து உயிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவசியின் மகன் லெனின்(38). இவரது மனைவி மனைவி சித்ரா(35). இவர் கடந்த 7 மாதங்ளுக்கு முன்பு கணவருடன் தகராறு செய்து பிரிந்து சென்று திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் கிராமத்திற்கு சென்றாராம். இந்நிலையில், வீரசோழன் சென்று வாழ அழைத்த நிலையில் மறுத்துள்ளார்.
இதனால் மனக்கவலையடைந்த அவர் நேற்று(புதன்கிழமை) மாலையில் வீரசோழன் கிராமத்தில் விவசாய பம்ப்செட் கிணறில் விஷம் குடித்து உயிரிழந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அவரது உறவினர் காளிதாஸ்(23) வீரசோழன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து லெனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement