முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் மூத்த குடிமக்கள், ஓய்வூதியோர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியோர்கள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 செப்டம்பர், 2015 at 7:52 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:18 PM

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியோர்கள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் தனியார் அரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். சாத்தூர் ஒன்றிய தலைவர் சி.கே.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். பின்னர் காலமான இயக்க உறுப்பினர்களுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் அறிக்கை சமர்பித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.தேவராஜ் வரவு, செலவு கணக்கு அறிக்கையை சமர்பித்தார்.

இதில், மூத்த குடிமக்கள் தனித்து பயணித்தாலே ரயில் கட்டணச் சலுகை அனுபவிக்கலாம் என்ற ரயில்வே துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளில் உள்ள தவறான விவரங்களை திருத்தம் செய்ய வேண்டும். கேரளம் போல் மாத முதல் நாளிலேயே ஓய்வூதியம் வழங்கவும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து தேர்தல் வாக்குறுதிப்படி வரையறுக்கப்பட்ட பென்சனை நீட்டிக்க செய்ய வேண்டும் என்பது போல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.