முகப்பு
தமிழ்நாடு

கம்பத்தில் சில்லரை விற்பனைக்கு கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

கம்பத்தில் சில்லரை விற்பனை கஞ்சா கொண்டு சென்ற 4 பேரில் இரண்டு பேரை வடக்கு போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

கம்பத்தில் சில்லரை விற்பனை கஞ்சா கொண்டு சென்ற 4 பேரில் இரண்டு பேரை வடக்கு போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

கம்பம் வடக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில், ரகசிய தகவலின்பேரில் செவ்வாய்கிழமை வாரசந்தை அருகே ரோந்து சென்றபோது, 4 பேர் சந்தேகப்படும் வகையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை நிற்கச் சொல்லி  போலீஸார் விசாரித்தபோது, இரண்டு பேர் தப்பி ஓடினர். பிடிபட்ட இரண்டு பேரிடம் விசாரனை நடத்தியதில், கம்பம் கோம்பை ரோட்டைச் சேர்ந்த சின்னாத்தேவர் மகன் சிவமாயன்(33),  செல்வராஜன் மகன் ஆனந்த்(19), என்று தெரியவந்தது.

இவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், தொடர் விசாரனையில் தப்பி ஓடியவர்கள் மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த  லட்சுமணன் மகன் பாலு என்று குட்டை பாலு(52),  ஆங்கத்தேவர் மகன் சுரேந்திரன்(24), என்று தெரியவந்தது. சிவமாயன், ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்ததோடு, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.