விருதுநகரில் பெண்ணிடம் 5 சவரவன் நகை பறிப்பு: 2 பேர் கைது
விருதுநகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர் உள்பட 2 பேரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர் உள்பட 2 பேரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில் ஊழியர் சுபாஷ்சந்திரபோஸ்(61). இவர் மனைவி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து முத்துநகர் விரைவு ரயிலில் வந்தார்.
அப்போது ரயில் தண்டவாளம் வழியாக செல்கையில் அப்பகுதியில் 4 பேர் நின்றிருந்தனர். அதில், சரக்கு ரயிலை கடக்க குனிந்து செல்லும் படியும் கூறினார்களாம். குனிந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.
Advertisement
இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீஸாரிடம் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக விசாரணை செய்ததில் திண்டுக்கல் ரயில்வே டிரக்மேன் கோமதிநாயகம்(35), விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த சேகர்(45) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.