முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாதிரி கேக்: மக்களின் காட்சிக்கு தொடங்கி வைத்தார் கோட்டாட்சியர்

சிதம்பரத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 16-ல் அனைவரும் வாக்களிப்போம் என்ற வாசகம் கொண்ட மெகா மாதிரி கேக்கை பொதுமக்கள் காட்சிக்கு கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பி.எஸ்.விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 16-ல் அனைவரும் வாக்களிப்போம் என்ற வாசகம் கொண்ட மெகா மாதிரி கேக்கை பொதுமக்கள் காட்சிக்கு கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பி.எஸ்.விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் தெற்குரதவீதியில் தனியார் ஸ்வீட் ஸ்டால் வெளியே மே 16-ல் அனைவரும் வாக்களிப்போம் என்ற வாசகம் அடங்கிய கேக் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி மக்கள் காட்சிக்கு தொடங்கி வைத்து வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அரங்கநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், அலுவலக உதவியாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments