முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருநெல்வேலி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கொலையுண்ட தொழிலாளியின் மனைவிக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணமும், மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரம் வி.எம். காலனியை சேர்ந்தவர் ராமையா மகன் குணபாலன் (45). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் இதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் (29).

வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த இசக்கி மகன் செல்வம் என்ற மாரிசெல்வம் (32). குடிபோதையில் செல்வத்திற்கும், மாரிசெல்வத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இதில் செல்வம் மீது மாரிசெல்வத்திற்கு விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே 16.05.2008 அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாரிசெல்வம், செல்வத்தை தாக்குவதற்காக அரிவாளுடன் வந்தாராம். இதனை குணபாலன் கண்டித்தாராம்.

இதில் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், குணபாலனை கட்டையால் தாக்கிவிட்டு தப்பி விட்டாராம். பலத்த காயமடைந்த குணபாலன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். முக்கூடல் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வம் என்ற மாரிசெல்வத்தை கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி 2 ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ. அப்துல்காதர், திங்கள்கிழமை குற்றவாளி மாரிசெல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் குணபாலன் மனைவிக்கு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 வருடம் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இவ்வழக்கில் இறந்த குணபாலன் மனைவிக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். அவருக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ராஜபிரபாகரன் ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →