முகப்பு
தமிழ்நாடு

ஆலங்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் வட்டாட்சியர்

புதுகை மாவட்டம் ஆலங்குடியில், தினமணி நாளிதழ், ஹொலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து வியாழக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

ஆலங்குடி: புதுகை மாவட்டம் ஆலங்குடியில், தினமணி நாளிதழ், ஹொலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து வியாழக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.

சட்டப்பேரவை தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் தினமணி நாளிதழ், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு  இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது.

இதன்தொடர்ச்சியாக, ஆலங்குடி, அரசமரம் பேருந்துநிறுத்தம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கருப்பையா தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியரும்,ஆலங்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவருமான, ரெங்கராஜன் விழிப்பணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

இதில், அப்பகுதி வணிகர்கள், பொதுமக்கள் கட்டாயம் வாக்களிப்போம், பணத்திற்காக வாக்குகளை விற்கமாட்டோம், நல்லவரை தேர்ந்தெடுப்போம்,100% வாக்களித்து ஜனநாய கடமையாற்றுவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் இஸ்மாயில், கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மாரீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →