ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடி வழிபட்டனர்.
திருச்செந்தூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடி வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடாந்து கால சந்தி பூஜையாகி, தீர்த்தவாரி நடைபெற்றது.
அதன்பின் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. ஆடிஅமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனிதநீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி தரிசனமும் செய்தனர். இதனால் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.