தமிழ்நாடு

வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது

கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டு இடங்களில் பிராத்தனை தவிர்த்து கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வேறு எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

DIN

கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டு இடங்களில் பிராத்தனை தவிர்த்து கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வேறு எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அதுபோன்ற செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வெளிநாடுவாழ் இந்தியரான அப்துர் ரஹ்மான் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:
பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக் கோரி, சென்னை அண்ணாசாலையில்
உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சிலிடம் (ஙஹந்ந்ஹ ஙஹள்த்ண்க் நட்ஹழ்ண்ஹற் இர்ன்ய்ஸ்ரீண்ப்) முறையிட்டேன்.
ஆனால், தன்னை மிரட்டி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கையெழுத்து பெற்று விட்டனர். தன்னை போன்று பலர் இந்த கவுன்சிலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கவுன்சில் நீதிமன்றம் போல் செயல்படுகிறது. அங்கு வருவோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. இவற்றை தடை செய்யக்கோரி ஏற்கெனவே தமிழக உள்துறை செயலர், டிஜிபி, சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்திருந்தேன்.
அதில், சொத்து தொடர்பான விவகாரங்கள், குடும்ப விவகாரங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 100 -க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. ஆகையால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை பார்க்கும் போது, நீதிமன்றங்கள் போன்று சம்பந்தப்பட்ட கவுன்சில் நிர்வாக அதிகாரிகள், வழக்குரைஞர்கள் வழக்கு எண், கோப்பு எண் உள்ளிட்டவையை வழங்கி வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் குடும்ப விவகாரங்களுக்கு சட்டவிரோதமாக அழைப்பாணையும் (சம்மன்) அனுப்பி உள்ளனர்.
எனவே கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிப்பாட்டு இடங்களில் பிரார்த்தனை தவிர்த்து, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேறு எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவற்றுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஜனவரி 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ம் நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

தமிழ்நாடு கல்வியில் முன்னணி: அன்பில் மகேஷ் விளக்கம்!

திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாத மார்கழி!

வேலூர் ஸ்ரீபுரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு உயரும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT