சுத்தமான நகரங்கள்: 3-ம் இடம் பிடித்தது திருச்சி; மைசூரு மீண்டும் முதலிடம்
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கர்நாடகாவின் மைசூரு நகரம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
சுத்தமான நகரங்கள் குறித்து இந்திய தர ஆணையம் நடத்தி ஆய்வுகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று வெளியிட்டார்.
அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் முதலிடம் பெற்ற கர்நாடகாவின் மைசூர் நகர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
Advertisement
பஞ்சாபின் சண்டீகர் நகர் இரண்டாம் இடத்தையும், தமிழகத்தின் திருச்சி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.கடந்த முறை திருச்சி இரண்டாம் இடம் பிடித்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான 'ஸ்வஜ் பாரத்' திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 51 நகரங்கள் உள்பட 73 நகரங்களில் இத்திட்டம் செயல்படுவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.