சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வழக்குகள் வழங்க உச்ச நீதிமன்றம் தடை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், விசாரணை செய்வதற்காக வழக்குகள் ஏதும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றி வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணன், விசாரணை செய்வதற்காக வழக்குகள் ஏதும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தனி செயலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதனிடையே, நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த ஆணையை நீதிபதி கர்ணனே தடை செய்து இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பணியிட மாறுதல் குறித்து ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
மேலும், கனம் நீதிபதி அவர்களே எனது நீதிமன்ற பணிகளில் தலையிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு குறித்து மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.